2.10.12

Guruvasagam - Pournami 30 Sep 2012 Satsang


  1. முன்னர் காலங்களில், தன்னை உணர்த்துவதற்காக நீதி கதைகளை சொன்னார்கள்
    • நீதி - பாட்டி வடை சுட்ட கதை
திருடிய பொருள் நிலைப்பதில்லை
புகழால் அறிவு மயங்கிவிடும்
        • பாட்டி  வடை சுட்டாள்
        • அங்கிருந்த  காக்கா அதை திருடிச் சென்றது
        • சூதரிந்த நரி காக்கை அழகாக இருக்கிறது என்று புகழ் பாடி, காகத்தை பாட கேட்டது
        • காகமும் பாட , வடையை நரி எடுத்து சென்றது ; காகம் ஏமாந்து போனது (ஏமாற்றாதே , ஏமாற்றினால் நீ ஏமாறுவாய்)
    • இன்றைக்கு அறிவு என்பதென்ன ?
      • காகம் பாட கேட்ட போது, அறிவால் உணர்ந்து வடையை காலில் வைத்து பாடியது
      • நரி ஏமாந்து போனது 
    • இன்றைய அறிவு சிந்தனை : ஏமாற்றாதே , புத்திசாலிதனமாக ஏமாற்றினால் நீ பிழைத்து கொள்வாய்
    • இக்கால குழந்தைகளுக்கு நாம் என்ன நீதி கதைகளை கற்று கொடுப்பது ?
  1. புறாணங்களுக்குள்ளே  அற்புதமான நீதி உள்ளது
    • சனாதன தர்மத்தில் , சைவத்தில் அற்புதமான அன்பை கண்டார்கள்
    • அன்பு எங்குளதோ அங்கு சிவம் இருக்கிறது
    • தன்னுள்ளே சிவத்தை கண்டு ,எல்லோரிடமும் அதே அன்பை சிவமாக கண்டார்கள்
    • அதானால் எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தார்கள்
    • தீங்கு செய்யாத மனம் யாருக்கு இருக்கிறதோ , அவர்கள் தான் சைவர்கள் , சிவனடியார்கள்
    • உயிர் வாழ்வதற்காக கூட எவ்வுயிரையும்  துன்புறுத்துவதில்லை
  2. எல்லோரும் சிவம்
    • ஆக, சிவனுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்றால் , யாருக்கு தொண்டு செய்ய வேண்டும் ?
      • சிவமாக இருக்கின்ற உயிர்களுக்கு தொண்டு செய்தால் போதும்
      • எங்கு சென்று சிவனை தேடுவது ? சிவம் எங்கு இருக்கிறது ?
      • மனிதர்களில் இருக்கிறார் ? நமக்குள்ளே அந்த சிவத்தை உணர்கிறோம்
    • யாரை சிவமாக பார்க்கலாம் ? எல்லோருக்கும் சேவை செய்ய முடியுமா ?
      • முதலில் தாய் தந்தைக்கு சேவை செய்ய வேண்டும்
      • தாய் அன்பின் வடிவம் ஆக முதல் சிவம் அன்னை தந்தை
    •  சிவா புராணத்தில் மாம்பழ கதை - இதை விளக்கவே
      • மாங்கனியை பெற விநாயகருக்கும் , முருகருக்கும் போட்டி
      • யார் முதலில் உலகை மூன்று முறை வளம் வருகிறார்களோ , அவர்களுக்கே மாங்கனி 
      • ஆற்றல் பெற்ற முருகன் மயிலேற
      • அறிவு படைத்த விநாயகர் சிவசக்தியிடம் வினா எழுப்பி "உலகம் என்றால் என்ன ?" 
      • "அன்னை தந்தை உலகம்"
      • அன்னை தந்தையை வலம் வந்தால் உலகத்தை வலம் வந்ததற்கு சமம் என்ற தத்துவத்தை நிலை படுத்தினார்
      • ஆக உலகத்திற்கு நல் கடமைகளை செய்ய முதலில் அன்னை தந்தைக்கு நற்கடமைகளை செய்க
  3. தர்மம் என்றால் என்ன ?
    • முதலில் தனுக்கு, தன் குடும்பத்திற்கு, பிறகு தன் சமுதாயம், பிறகு தான் உலகம்
      • குடும்பமா சுய நலமா ? - குடும்பத்திற்காக  சுய நல உணர்வுகளை தியாகம் செய்தல்
      • சமுதாயமா  குடும்பமா ? சமுதாயத்திற்காக குடும்ப உணர்வுகளை தியாகம் செய்தல்
      • தேசமா சமுதாயமா ? தேசத்திற்காக சமுதாய உணர்வுகளை தியாகம் செய்தல்
      • உலகமா தேசமா ? உலகத்திற்காக தேசிய உணர்வுகளை தியாகம் செய்தல்
    • எப்படி சிலந்தி தானே தன்னிலிரிந்து வலையை பின்னியதோ அதை போல ,
    • இறை ஆதியில் தன்னை மறந்திருந்த  நிலையில் தன்னுடைய எண்ணத்தால் இவை அனைத்தையும் தானே உருவாக்கி இருக்கிறது
  4. இறைதன்மை ?
    • ஒவ்வொன்றுக்குள்ளும் அந்த அறிவு இருக்கிறது
    • ஆக மனித்க்குள்ளும் யார் புகுந்து இருக்கிறார் ? இறைவனா ?
    • இறைவன் , ஆகவே உனக்குள் இருக்கின்ற இறை சக்தியை நம்பு , உன்னை நம்பு
    • இறைவன் உள்ளிருக்கிறார் என்றால் , யார் வெளிப்பட வேண்டும் ? இறைதன்மை
    • நாம் இறை தன்மையோடு இருகிறோமோ ? சிந்திக்க வேண்டும்
       சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்
  5. ஏன் நமக்குள் இருக்கும் இறைவனை உணர முடிய வில்லை ? ?
    • கோவில் செல்லும் போது மட்டும் இறைவனை நினைப்பதை போல , எப்பொழுதும் இறை தன்மையோடு இருக்க முடிய வில்லை ?
    • என்னென்றால் நம் மனம் வெளியில் பார்த்து பார்த்து பழக்கப்பட்டது , உள்ளே செல்ல மறுக்கிறது
    •  குழந்தைகளுக்கு 2 நாட்கள் டிவி காண்பித்து மூன்றாவது நாள் மறுத்தால் என்னாகும் ? எங்க போகும் ? டிவி கிட்ட செல்லும் .

      21
      நாட்கள் பழகினால் 22 நாள் தானாகவே செல்லும்
  6. கடவுள்நம்பிக்கை - கடந்த உள் நம்பிக்கை
    • கடவுள் நமக்குள்ளே இருக்கிறாரா  இல்லையா ?
    • எப்படி இருக்கிறார் என்று நம்புவது ?
    • அதனால் தான் "கோவிலில்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்" என்று சொன்னார்கள்
    • ஒவ்வொரு ஊரில் கோவில் கட்டி கொள்கிறோம்
  7. மனித இயல்பு - மறதி
    • கடவுளை நாம் மறந்து விடுகிறோம்
    • மறவாமல் இருக்க ஒரு அடையாளம்  வேண்டும்
    • அந்த அடையாளம் திருநீர் . "நீரில்ல நெற்றி பாள்"
    • குருவே நீங்கள் நெற்றி இட்டுகொள்கிரீர்களா என்றால் "அது சிவ நீர். உள் நீர். அந்த நீரில்லா நெற்றி பாள்"
  8. வர்ணாச்ரம தர்மம்
ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணுல் எதற்கு
    • பார்பான் மட்டும் பூணூல் போடுவதில்லை
    • மூன்று வர்ந்தர்களும் - வைசியர்கள் ,ஷத்ரியர்கள் , அந்தணர்கள் அந்த பூணூல் போட வேண்டும்
    • எதற்கு ?
      பார்க்கும் பொருட்களை விட பார்பவேனே பெரியவன் "
    • பார்பான் யார் ?அந்தணன் யார் ?
      • கண் பார்கிறதா ? அறிவு பார்கிறதா ? நான் பார்கிறேன் ? யார் தன்னை உணர்கிறார்களோ அவனே பார்ப்பவன்
      • நான் பார்கிறேன் , நானே கேட்கிறேன் , நானே சிந்திக்கிறேன் , நானே உறங்கினேன் , நானே கனவு கண்டேன்
      • ஆக நான் என்ற விழிப்பு கனவு உறக்கம் கடந்த அந்தத்தை உணர்ந்தவன் எவனோ அவனே அந்தணன்
      • அந்த பிரம்மத்தை உணர்ந்தவனே பிராம்மணன், அந்த ஆத்மாவை உணரு;அந்த ஜோதியை உணரு
    • முப்புரி நூல்- தத்துவம்
      • பிராம்மணனுக்கு முப்புரிநூல் என்று பெயர், அதே கயிறாய் இடுப்பில் கட்ட அரை ஞான் கயிறு
      • மூன்று அறை சுற்று
      • நமக்குள்ளே இருநின்ற உயிரை இயக்குவது எதுவோ அதுவே பிரம்மம் ;
  1. அந்த ஆத்மாவை உணர்வதால் என்ன ?கடவுள் இருப்பதால் நமக்கென்ன பலன் ?
    ஆனந்தம் கிடைக்கும்
      • உறக்கத்தில் நாம் அதை அனுபவிக்கிறோம் ,ஆனால் உணர முடியவில்லை
      • ஆகவே உறக்கத்திற்கு பின்பு "நான் நன்றாக உறங்கினேன் என்று கூறுகிறோம் ,ஒன்றும் தெரியவில்லை , சுகமாக இருந்தது "
      • அந்த சுகம் கடவுள்
      • இல்லை என்றால் உறக்கம் இன்றி வேலை செய்து கொண்டே இருப்போம்
      • எத்தனை தான் புறப்பொருட்கள் இருந்தாலும் உள்ளே ஒன்றாத வரை ஒரு ஆனந்தம் என்பதை மனிதனுக்கு அளிக்காது
      • கோடி கோடி பொருள் சேர்த்தாலும் உறக்கம் இல்லை என்றால் பைத்தியம் பிடிப்பதை  போல இருக்கும்
  2. சன் மார்க்கம் - ஆறு வழிகள்
    • இறைவனை சிவனாக விஷ்ணுவாக முருகனாக சக்தியாக விநாயகராக வழிபட்டோம்
    • ஆனால் வழிபட்ட பொருள் ஒன்று தான் , ஒன்று என்ற உணர்வோடு
      • சைவம் - எல்லாம் வல்ல இறைவன் - சிவம் ஒருவர் தான்
      • வைஷ்வனம்  - எல்லாம் வல்ல இறைவன் - விஷ்ணு ஒருவர் தான்
      • கிருத்தவம் - எல்லாம் வல்ல இறைவன் - கர்த்தர் ஒருவர் தான்
      • இஸ்லாம் -அல்லா ஒருவர் தான் -கர்த்தர் ஒருவர் தான்
    • ஒன்றாக இருபதில் இதில் எது பெரியது ? எது சிறியது ?
      • ஏற்ற தாழ்வுகள் இல்லை
  3. தண்ணீர் பிரச்னை 
      • உச்ச நீதி மன்றம் உரைத்தால் கூட ஒரு சொட்டு தண்ணீர் தமிழகத்திற்கு விட மாட்டோம்
      • நாம் தமிழன் - அவர்கள் கன்னடம்  என்ற பேதைமை
      • இந்தியனாக இரு - இந்திய பொருட்களை வாங்கு
      • உலகில் எந்த நாட்டிலும் நாம் இப்படி சொல்வதே இல்லை. நாம் இந்தியர் என்பதை மறந்து விடுகிறோம்
      • தண்ணீர் எந்த மாநிலத்திற்கும் சொந்தமானது அல்ல
      • இந்தியா சட்டத்தின் படி மண்ணும் விண்ணும் நீரும் காற்றும் இந்தியாவிற்கே சொந்தம்
      • உலகில் ஜீவ ஆதார பொருகளை எந்த நாடும் பிறருக்கு தடை செய்ய கூடாது
      • மத்திய அரசு முறையாக தண்ணீரை காஷ்மீரம் முதல் கணியகுமரி வரை கொண்டு சென்றால் , மாநிலம் தலை இட வேண்டிய அவசியம் இல்லை
      • பூமி  யாருக்கும் சொந்தம் இல்லை ; எல்லோருக்கும் பொதுவானது
      • தனி மனிதனா ? அல்லது 110 கோடி மக்குளுக்கு ஏற்பதுதபட்ட சட்டமா ?
      • அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் எந்த கடவுளை எப்படி வேண்டுமானாலும் வழிபட பிறப்புரிமை உண்டு
  4. எண்ணத்தில் களை எடுக்க ஆத்ம விசாரம்
      • கசாப் என்ற தீவிரவாதியை பாதுகாத்து தூக்கில் போடுவதற்கு ஒரு மாதத்திற்கு 5 கோடி செலவு , எப்படிப்பட்ட ஆன்மீக பூமி நம் பூமி
      • ஒரு விவசாயி களை வந்தால் என்ன செய்வார் ? வரட்டும் என்று விட்டு விடுவாரா ?
      • களை என்று தெரிந்த உடனே களைந்து விடுவோம் ; களை களைதாலன்றி நல்ல பயிர்கள் விளையாது
      • சிறிய களைகளாக இருக்கிற பொழுதே களைய வேண்டும் !
      • அதை போல மனதில்  சிறிய களைகளாக இருக்கின்ற போதே , அதை களைய வேண்டும் !
      • தேவை இல்லாத எண்ணங்களை அவ்வபோதே களைந்து விடுங்கள் !
      • அதுவே ஆத்மா விசாரம் ! அதுவே தியானம் 
  5. தூங்கி கண்டார் சிவம் தம்முள்ளே
துயில் பெரும் துயில் அறி துயில்
      • நான் உறங்கிகிறேன் என்றால் , உடல் கடந்து மனம் கடந்து அறிவும் கடந்து ஆனந்தமாக இருத்தலே தியானம்
      • ஆகவே அதி காலை விழித்து சூரியனை , இயற்கை வழிபட்டது நமது கலாச்சாரம்
      • முதலில் உருவத்தை காட்டி , பிறகு உருவத்தில் உள்ள ஒளியை காட்டி , ஒளியை கடந்த உணர்வை உணர்தல்
      • உடல் - சாபிடுவது , துங்குவது , போகம் தூய்பது என்ற நிலையை கொண்டது
      • உண்ணா விரதம் , மௌன விரதம்பௌர்ணமி அன்று கண் விழித்து கடைபிடித்து, உடல் உணர்வு கடந்து , உயிர் உணர்வோடு ஒன்றுகிறோம் .
      • உயிர் உறங்குவதில்லை ; இரத்த ஓட்டம் , மூச்சின்  ஓட்டம் நிற்பதே இல்லை - உயிர் உறங்கினால் நான்கு பேர் தூக்கி செல்வார்கள்
  1. உயிர் எது வழியாக இந்த உடலுக்குள்ளே வந்தது ?
உச்சியின் வழியாக
      • உச்சியின் வழியாக நாம் செல்ல வேண்டும் ; அதை குறித்த நிலையில் இருக்க வேண்டும்
      • தென் பகுதியிலிரிந்து இந்த உயிர் ஆற்றல் வட பகுதிக்கு செல்ல வேண்டும் 
  1. கடவுளை  நம்பு ! நம்பினோர் கை விட படார் !
      • கடவுளை உருவமாக  , ஒளிமாக , உணர்வாக பார்க்கலாம்
  2. குரு தத்துவம் என்ன ?
                                        
    "மெய்-உணர்வு"
      • மூலாதாரத்தில் அந்த சக்தி உடல் உணர்வு , மார்பில் மன உணர்வு  ,புருவ  மையத்தில் அறிவு  உணர்வு - ஞான உணர்வு , உச்சியில் ஆத்ம உணர்வு
      • அந்த சக்தியை உச்சியில் வைத்து நினைத்தல்,
      • புருவ மையத்தில் வேண்டுதல் , உறங்காது இறை உணர்விடம் வேண்டுதல்
  3. பொறுமை
      • நம்பிக்கை முக்கியம் ! கேட்டது கிடைக்கும் வரை பொறுமை வேண்டும்
      • இறைவா எனக்கு பொறுமை கொடு
      • குடும்ப வாழ்க்கைக்கு ஆதாரம் பொறுமை வேண்டும்
      • மனதிற்கு பொறுமை வேண்டும் !
  4. குருவை உணர்வாக நினை
      • மனமே சும்மா இரு ! மனம் சும்மா இருக்க முடியுமா ?
      • எதையாவது நினைக்கும் தன்மை கொண்டது
      • ஆக நல்லதே நினை ! கடவுளை நினை ! கோவிலில் உருவமாக காட்ட பட்டது ! வழிபட்டோம்
      • சூரியன், சந்திரன் காட்டப்பட்டது ! வழிபட்டோம்
      • குரு என்ன காட்டி கொடுத்திருகிறார் ? உணர்வு எந்த உணர்வு ?
      • பிரபஞ்சத்தை உருவாக்கி , காத்து , ஒடுக்குகிற உணர்வாக இருக்கின்ற சக்தியை  நினை !
  5. கடவுளிடம் என்ன கேட்கலாம் ? எப்படி கேட்கலாம் ?
      • நல்ல உடல் நலம் , மன வளம், நல் ஞானம் , நல் மனைவி , நல்ல பொருளாதாரம்  அனைத்தையும் கேட்டு பெற்று கொள்ளலாம்
      • உணர்விடம் கேளுங்கள் கேட்டால் கிடைக்கும் ! நிச்சயம் கிடைக்கும் !
      • உணர்வோடு அன்போடு , உருகத்தொடு , பக்தியோடு கேட்டால் கிடைக்கும்
      • கேட்டதற்கு மேல் பண் மடங்கு கிடைக்கும்
      • பக்தியில் கோவில் சென்று வழிபட்டாலும் , அகத்திலே மனம் வழிபடுகிறது ! எங்கு சென்றாலும் மனமே வழிபடுகிறது
      • முழு மனதோடு உருகத்தொடு , நம்பிக்கையோடு வழிபட வேண்டும் ! வழிபட்டால் வேண்டுவது கிடைக்கும்

No comments: